January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சர்வதேச யோகா தினம்: திருக்குறளை மேற்கோள்காட்டி இந்திய பிரதமர் மோடி உரை

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு  ‘நோய் நாடி நோய் முதல் நாடி’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (21) நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.

அதேநேரம், முதலில் எந்த ஒரு நோயாக இருந்தாலும் அதற்கான காரணத்தை கண்டறிந்து அதன் பின்னரே மருத்துவம் அளிக்க வேண்டும் என்பதை அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

இதன்போது பொது மக்களிடம் யோகாவின் முக்கியத்துவமும், ஆர்வமும் அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இலட்சக்கணக்கான மக்கள் யோகாவை பின்பற்ற தொடங்கியுள்ளதாகவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கொரோனாவால் 2 ஆண்டுகளாக யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்படாமல் போனாலும் யோகா மீதான ஆர்வம் குறையவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு மனதை ஒருமுகப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது யோகா எனவும் கொரோனாவுக்கு எதிராக உலகம் போராடி வரும் நிலையில், நம்பிக்கை ஒளிக்கீற்றாக யோகா ஆசனங்கள் இருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதேவேளை ‘நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி ஒவ்வொரு நாட்டு மக்களும் ஆரோக்கியமாக இருக்க பிரார்த்திக்கின்றேன் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.