தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூன் 28 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதேநேரம், மாவட்டங்களை மூன்று வகைகளாக பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மளிகை, பலசரக்கு, காய்கறிகள், இறைச்சி விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயற்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தொற்று அதிகமுள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் இல்லை. நடைமுறையில் உள்ள தளர்வுகளே தொடரும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
மாவட்டங்களில் உள்ள நோய் தொற்று பாதிப்பின் அடிப்படையில், மாவட்டங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.
வகை 1 – (11 மாவட்டங்கள்)
கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள்.
வகை 2 – (23 மாவட்டங்கள்)
அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்.
வகை 3- (4 மாவட்டங்கள்)
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள். இதில் மூன்றாம் வகை மாவட்டங்களுக்கு மட்டுமே அதிக அளவிலான தொடர்புகள் தற்போது வழங்கப்பட்டிருக்கின்றன.
மேலும், சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் 100 நபர்களுடன் பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் 50 வீத பயணிகளுடன் பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் 28-06-2021 வரை நீட்டிப்பு – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு
1/4 pic.twitter.com/LZFlXyBUMl— TN DIPR (@TNDIPRNEWS) June 20, 2021