அண்மையில் உலக தலைவர்கள் குறித்த கருத்துகணிப்பு பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.இதில் கடந்த முறையும் இந்திய பிரதமர் மோடியே முதலிடத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது.ஆனால் இம்முறை அவரின் செல்வாக்கு சற்று குறைந்தாலும் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
உலக தலைவர்களுக்கான ஒப்புதல் மதிப்பீட்டின் படி, சில புள்ளிகளில் பிரதமர் நரேந்திர மோடி சரிவை சந்தித்திருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவை சேர்ந்த Morning consult என்ற அமைப்பு வருடம்தோறும் global leader approval rating tracker என்ற பெயரில் உலகத் தலைவர்களுக்கான மதிப்பீடு ஆய்வறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.
இதில் இந்த ஆண்டிற்கான இந்தியா,அமெரிக்கா,ஜெர்மனி,பிரான்ஸ், ரஷ்யா,கனடா, பிரேசில், இத்தாலி, பிரிட்டன், ஜப்பான், தென் கொரியா, அவுஸ்திரேலியா,ஸ்பெயின்,மெக்சிகோ ஆகிய 14 நாடுகளின் தலைவர்களின் செல்வாக்கு குறித்து புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 75 புள்ளிகளை பெற்ற பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தை பெற்றிருந்ததாக கூறப்படுகிறது .ஆனால் இந்த ஆண்டு 66 புள்ளிகளை மட்டுமே இந்திய பிரதமர் மோடி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இருந்தபோதிலும் உலக தலைவர்களின் புள்ளிகள் மதிப்பீட்டு வரிசையில் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி முதல் இடத்திலேயே இருந்து வருகிறார்.
இந்தியாவில் கொரோனா பெருந் தொற்று இரண்டாம் அலையின் தொடர்ச்சியாகத்தான்,பிரதமர் நரேந்திர மோடியின் புள்ளிகள் சரிந்து இருப்பதாக மதிப்பீடு செய்த Morning consult நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இந்த மதிப்பீட்டு வரிசையில் 65 புள்ளிகளுடன் இத்தாலிய பிரதமர் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் .
ஜெர்மன் அதிபர் 5 வது இடத்திலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 6 வது இடத்திலும் இருப்பதாக உலக தலைவர்களுக்கான மதிப்பீடு ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.