பூமி பாலைவனமாக மாறுவதை தடுப்பதற்கான 14 வது ஐ.நா. மாநாடு காணொளி வாயிலாக நடைபெற்றது.
இந்த நிகழ்வின் தலைவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக உரையாற்றினார்.
இந்தியாவில் சீரற்ற நிலையில் உள்ள 2.6 கோடி ஹெக்டேயர் நிலங்கள் வரும் 2030-ம் ஆண்டுக்குள் மீட்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. நிகழ்வில் உறுதியளித்துள்ளார்.
பூமிக்கு நீர்பரப்பு எந்த அளவுக்கு முக்கியமோ, அதேபோல் நிலப்பரப்பும் முக்கியமானது என இந்திய பிரதமர் வலியுறுத்தி இருக்கிறார்.
நிலங்களை பாதுகாப்பதற்கு நாம் முக்கியத்துவம் அளிப்பதில்லை.சுற்றுச் சூழலின் நிலை தன்மைக்கு, பூமி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்கும் காடுகள் அவசியம் என்பதை அனைவரும் உணர வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
வளர்ச்சி என்ற பெயரில் தற்போதைய காலகட்டத்தில் நிலங்களும், அதன் வளங்களும் சுரண்டப்படுவதாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.
நிலங்களை பாதுகாக்காவிட்டால் நாளடைவில் அவை பாலைவனமாக மாறும் அபாயம் ஏற்படும். தற்போது இருக்கும் சவால்களில் மிகப் பெரியது நிலங்களை மீட்டு எடுப்பதாகும்.
இவற்றை பசுமையாக மாற்ற உலக நாடுகள் ஒன்றிணைந்து ஒத்துழைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 30 லட்சம் ஹெக்டேர் வனப்பரப்பு கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி ஐ. நா. கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் இவ்வாறு பசுமையான நிலங்களை மீட்டு எடுக்கும்போது மூன்று பில்லியன் டன் அளவிலான கரியமில வாயு வெளியேற்றத்தை தடுக்க முடியும் என பிரதமர் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.