பேரறிவாளன் இனி சிறைக்கு செல்லக்கூடாது என அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராஜிவ் கொலை வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பேரரறிவாளன் 30 நாட்கள் பரோலில் வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது தனது தாயாருடன் வசித்து வருகிறார்.
இந் நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழக முதலமைச்சருக்கு, தனது மகன் இனிச் சிறைக்கு செல்லக் கூடாது எனவும் அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பேரறிவாளன் கடந்த 28ஆம் திகதி ஒரு மாத பரோலில் 4ஆவது முறையாக தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.
அதேநேரம் பேரறிவாளனுக்கு தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் அவர் சிறைக்கு செல்லக்கூடாது என அவரின் தாயார் கேட்டுக்கொண்டார்.
கடந்த 30 ஆண்டுகளாக சிறை வாழ்க்கை அனுபவிக்கும் பேரறிவாளன் பலவிதமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பேரறிவாளனுக்கு தொடர் மருத்துவம் கிடைக்காததால் அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
பேரறிவாளனுக்கு சிறுநீரக தொற்று இருப்பதால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ள அற்புதம்மாள், பேரறிவாளனுக்கு சிறுநீரக சிகிச்சை அளிப்பதற்காக பரோல் கேட்டிருந்தார்.
இதனை பரிசீலித்த தமிழக அரசு, பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.