January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையிலிருந்து மதுரை காவல் நிலையத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பால் பதற்றம்

இலங்கையிலிருந்து மதுரை திடீர்நகர் காவல் நிலையத்திற்கு இனந்தெரியாத மர்ம நபரால் வந்த தொலைபேசி அழைப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த நபர் ‘பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 3 பேர் இலங்கையிலிருந்து ஆயுதங்களுடன் கடல் வழியாக, ராமேஸ்வரம் வந்து தமிழகத்திற்குள் நுழைய முயல்கிறார்கள்’ என தொலைபேசியின் வாயிலாக குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு ‘தனக்கு தெரிந்த தகவல்களை தெரிவித்ததாக கூறி அந்த நபர் தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளார்.

இதனையடுத்து மதுரை திடீர்நகர் காவல் நிலையத்திற்கு வந்த தொலைபேசி எண்ணின் விபரங்கள் குறித்து கியூ பிரிவு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையிலிருந்து தொடர்பு கொண்டதாக கூறப்படும் குறித்த தொலைபேசி உரையாடலின் உண்மைத் தன்மை குறித்து பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

அதேநேரம் இலங்கை புத்தளம் மாவட்டம் சிலாபத்துறையை சேர்ந்த 27 பேர் சட்டவிரோதமாக தூத்துக்குடி வந்தடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் இருந்து மதுரை காவல் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.