கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவி கனடாவுக்கு செல்ல முயன்ற 27 இலங்கையர்கள் வெள்ளிக்கிழமை (11) மாலை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், க்யூ பிரிவு பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
கடல் வழியாக தமிழகம் வந்து தமிழகத்தில் இருந்து வெளி நாடுகளுக்கு செல்வதற்காக கடந்த 27ஆம் திகதி புத்தளம் சிலாபத் துறையிலிருந்து 24 ஆண்கள், இரண்டு பெண்கள், ஒரு குழந்தை என மொத்தமாக 27 பேர் படகு மூலம் கடல் வழியாக சட்ட விரோதமான முறையில் தூத்துக்குடி வந்தடைந்தனர்.
தூத்துக்குடி வந்த 27 பேரும் மதுரையில் தங்கியிருந்து கேரளா வழியாக கனடா செல்ல திட்டமிட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து க்யூ பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ராமநாதபுரம் மற்றும் மதுரை க்யூ பிரிவு பொலிஸார் வெள்ளிக்கிழமை மாலை 27 பேரையும் மதுரையில் வைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 27 பேரும் கடவுச் சீட்டு இல்லாமல் சட்ட விரோதமாக தமிழகத்திற்குள் நுழைந்ததாக வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.