தமிழகத்தில் கடந்த ஒருவார காலமாக ஊரடங்கால் கொரோனா எண்ணிக்கை குறைந்து வருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முதலமைச்சர்,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர தளர்வுகளற்ற ஊரடங்கு நேற்றைய தினம் (28) அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாகவும் அதேநேரம் கோவை, திருப்பூர்,மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும் மக்கள் தேவை இல்லாமல் வெளியே சுற்றக் கூடாது என்றும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு மத்தியில் கடந்த ஒரு வார காலமாக ஊரடங்கினால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஓரளவு குறைந்து வருகிறது என்று முதலவர் தெரிவித்துள்ளார்.
இதேவளை, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை மாவட்டத்தை நாளை (30)முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளார்.
அங்கு தடுப்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும் எனவும் இது முழுக்க முழுக்க அரசு முறை பயணம் என்பதால் தி.மு.க நிர்வாகிகள் வரவேற்பு கொடுக்கவோ அல்லது சந்திக்கவோ முயற்சி செய்ய வேண்டாம் எனவும் ஸ்டாலின் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.