தமிழகத்தில் மே மாதம் 31 ஆம் திகதிவரை முழு ஊரடங்கு போடப் பட்டிருந்த நிலையில், தற்போது ஜூன் 7 ஆம் திகதி வரைக்கும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.
ஜூன் மாதம் முதல் 13 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுதியினை ரேஷன் கடைகளில் பெறலாம் என முதலமைச்சர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுதி வழங்கப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் மளிகை கடைகள் எல்லாம் மூடப்பட்டுள்ள நிலையில், மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு, இம்முறை நடமாடும் மளிகை விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் மளிகை பொருட்களை விற்கலாம் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
அதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்து வரும் காய்கறி, பழங்கள் விற்பனை தொடரும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்
மளிகை பொருட்கள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர் கோரும் மளிகை பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.