தமிழகத்தில் இரண்டாவது அலை காரணமாக நாளுக்குநாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதனையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இயலுமானவர்கள் நிதி வழங்கி உதவ வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்தார்.
முதல்வரின் வேண்டுகோளை ஏற்று பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
தமிழகத்தில் முதலில் நிவாரண நிதி அளித்து முன்மாதிரியாய் செயல்பட்டவர் திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் எனக் கூறப்படுகிறது.
இவரைத் தொடர்ந்து பல தரப்பினரும் நிவாரண நிதி அளித்து வருகின்றனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் முதல்வர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபா நிதியுதவி செய்திருக்கிறார்.பாடலாசிரியர் வைரமுத்து முதல்வரை சந்தித்து 5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
நடிகரும் எம்.எல்.ஏ.யுமான உதயநிதி ஸ்டாலின் முதல்வரை சந்தித்து 25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன் 10 லட்ச ரூபாய் நிதி அளித்துள்ளார்.அதேபோல்,இயக்குநர் ஷங்கர் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 10 லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.
மேலும், நடிகர் ஜெயம் ரவி தனது அண்ணன் மோகன் ராஜா, தந்தை எடிட்டர் மோகன் ஆகியோருடன் சென்று 10 லட்சம் நிதியுதவி அளித்திருக்கிறார்.
ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் 1 லட்சம் ரூபாய் நிதியுதவியும்,இயக்குநர் சி.எஸ் அமுதன் 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி அளித்திருக்கிறார்கள்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் 30 கோடி ரூபாய் கொரோனா நிவாரண நிதியை அளித்திருக்கிறது.
தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு எஸ்.ஆர்.எம் குழுமம் சார்பில் ரூ.1.10 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டது.
அதேபோல் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரூ 1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.