January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய பிரதமர் மோடி பிரிட்டனில் நடைபெறும் ஜீ 7 மாநாட்டில் கலந்துகொள்ளாமல் இருக்க தீர்மானம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரிட்டனில் நடைபெறும் ஜீ 7 மாநாட்டில் கலந்துகொள்ளாமல் இருக்க தீர்மானித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஜீ 7 மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அழைப்பு விடுத்திருந்தார்.

பிரதமர் ஜோன்சனின் அழைப்பை தாம் பெரிதும் மதிப்பதாகவும், இந்திய நிலவரத்தைக் கருத்தில்கொண்டே பிரிட்டன் பயணத்தை இரத்துச் செய்ய தீர்மானித்ததாகவும் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜீ 7 மாநாட்டுக்கு முன்னதான கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தலைமையில் பிரிட்டன் சென்ற தூதுக்குழுவில் இருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.