
இந்தியாவில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி பாதுகாப்பளிக்கும் என்ற உத்தரவாதமில்லை என்று ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் பி.1.617 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகின்றதோடு, இலங்கையிலும் அவ்வகை வைரஸ் தொற்றியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் பரவும் வைரஸ் தடுப்பூசி ஏற்றிய பின்னரும் பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பி.1.617 கொரோனா வைரஸ் வீரியத்தன்மையுடன் பரவக்கூடியது என்றும் ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு விரைவாக தொற்றக் கூடியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் பரவும் பி.1.617 வகை, ஆரம்பமாக கண்டறியப்பட்ட கொரோனாவைவிட பயங்கரமானது என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.
தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதால் கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பு பெற முடியும் என்ற உத்தரவாதத்தை வழங்க முடியாது என்று இலங்கைக்கான யுனிசெப் பிரதிநிதி எம்மா பிர்ங்ஹாம் தெரிவித்துள்ளார்.