July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் 9 இலட்சம் கொரோனா நோயாளிகளுக்கு ஒக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை

இந்தியாவில் 9,02,291 கொரோனா நோயாளிகளுக்கு ஒக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதேபோல் 1,70,841 கொரோனா நோயாளிகள் வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

1.34 சதவீத கொரோனா நோயாளிகள் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள, 0.39 சதவீத நோயாளிகள் வென்டிலேட்டர்களிலும், 3.70 சதவீத நோயாளிகள் ஒக்ஸிஜன் உதவியுடனும் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை  நாடு முழுவதும் ஒக்ஸிஜன் விநியோகத்தை கண்காணிக்க, 12 பேர் அடங்கிய கண்காணிப்பு குழுவொன்றை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.

இந்த குழு, ஒக்ஸிஜன் உற்பத்தி அளவு, மாநிலங்களுக்கான தேவைகள், விநியோகம் ஆகியவற்றை ஆய்வு செய்து, உச்ச நீதிமன்றத்துக்கும், மத்திய அரசுக்கும் அறிக்கை அளிக்கும்.

கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல மாநிலங்கள் மருத்துவ ஒக்ஸிஜன், படுக்கைகள் மற்றும் முக்கியமான மருந்துகளின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.