January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் 8 ஆவது முதல்வராக பதவியேற்றார்.

இன்று முற்பகல் 9 மணியளவில் சென்னை கிண்டியிலுள்ள தமிழக ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அதன்படி, “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” என்று தொடங்கி பிரமாணத்தை மு.க.ஸ்டாலின் படித்தார். பிறகு ரகசிய காப்பு உறுதி மொழியையும் படித்து முடித்தார். 9.07 மணிக்கு ஸ்டாலின் பதவி

ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

இதன்போது துரைமுருகன், கே.என். நேரு, இ.பெரியசாமி, க.பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எஸ்.ரகுபதி, சு.முத்துசாமி, கே.ஆர்.பெரியகருப்பன், தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன், பி.கீதா ஜீவன், அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன், ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன், கா.ராமச்சந்திரன், அர.சக்கரபாணி, வி.செந்தில் பாலாஜி, ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன், பி.மூர்த்தி, எஸ்.எஸ்.சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன், சா.மு.நாசர், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன், சி.வி.கணேசன், த.மனோ தங்கராஜ், மா.மதிவேந்தன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

10 வருடங்களின் பின்னர் இம்முறை சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது.

தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள அதேவேளை, திமுக தனித்து 133 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது.

இதன்படி முதல்வராக திமுக தலைவர் இன்று பதவியேற்றதுடன், திமுகவின் அமைச்சரவையும் பதவியேற்றது.

கொவிட் தொற்று அச்சுறுத்தல் நிலைமையால் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலானோருக்கே அந்த நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதியளிக்கப்பட்டது.மு.க.ஸ்டாலின்-கவர்னர் பன்வாரிலால் புரோகித்

இதன்படி திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என 700 பேர் கலந்து கொண்டனர்.

இதேவேளை எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும்,  மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.