January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பதவி விலகினர்

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பதவி விலகியுள்ளனர்.

கட்சியின் துணைத் தலைவர்களான மகேந்திரன், பொன்ராஜ், பொதுச் செயலாளர்கள் சந்தோஷ் பாபு, மவுரியா, குமரவேல், முருகானந்தம் ஆகியோர் பதவிகளை இராஜினாமா செய்வதாக இன்று மாலை கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு அறிவித்துள்ளனர்.

கட்சியை சீரமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால் தலைவர் கமல்ஹாசனுக்கு அனைத்து உரிமைகளையும் வழங்கி அனைத்து நிர்வாகிகளும் பதவி விலகுக தீர்மானித்ததாக துணைத்தலைவர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்து அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்ட போதும், எந்தத் தொகுதியிலும் வெற்றிபெறவில்லை.

அத்துடன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் இறுதி சுற்று முடிவுகளில் பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீவாசனிடம் தோல்வியடைந்தார்.

இதனை அடுத்து தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் திமுக தலைவர் மு க ஸ்டாலினை தனியாக சென்று சந்தித்து கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்ய கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் தங்களது ராஜனாமாவை அறிவித்திருக்கிறார்கள்.