January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு சகோதரர் அழகிரி வாழ்த்து

தமிழக முதலமைச்சராக நாளை (வெள்ளிக்கிழமை)பதவி ஏற்கவுள்ள மு.க. ஸ்டாலினுக்கு அவரது சகோதரர் மு.க.அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘முதலமைச்சராக உள்ள மு.க. ஸ்டாலினை பார்த்து பெருமை கொள்கிறேன் என்றும் அண்ணன் என்ற முறையில் எனது தம்பிக்கு வாழ்த்துகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி வழங்குவர்’ என்றும்  மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.

கடந்த பல ஆண்டு காலமாகவே மு.க. ஸ்டாலின், மு.க அழகிரி ஆகியோருக்கு இடையே பனிப்போர் நிலவி வந்தது. தி.மு.க தலைவராக பொறுப்பேற்கும் முன்பிருந்தே கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.

அத்தோடு, நீண்ட காலமாக அழகிரி மற்றும் மு.க. ஸ்டாலின் இருவரும் உட்கட்சி பூசல் காரணமாக பேசாமலேயே இருந்து வந்தனர்.

இந்நிலையில், தற்போது முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கும் ஸ்டாலினுக்கு மு.க அழகிரி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.