January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரிட்டன்- இந்தியாவுக்கு இடையே புதிய குடிபெயர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது!

பிரிட்டன் மற்றும் இந்தியாவுக்கு இடையே புதிய குடிபெயர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

பிரிட்டனின் உள்துறைச் செயலாளர் பிரீத்தி பட்டேல் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

பிரிட்டனின் குடிபெயர்வுக்கான புதிய திட்டத்தின் கீழ் இரு நாடுகளும் இவ்வாறு உடன்படிக்கை செய்துகொண்டுள்ளன.

இந்த இரு தரப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கை இரு நாடுகளுக்கும் இடையே சட்ட ரீதியான பயணத்தை இலகுவாக்கி, ஊக்குவிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் நிலைமை சீரானதும் ஆரம்பிக்கப்படவுள்ள இந்தத் திட்டம் இளைஞர்களுக்கு இந்தியா மற்றும் பிரிட்டனில் வாழவும் தொழில்களில் ஈடுபடவும் வாய்ப்புகளை வழங்குவதாக பிரிட்டனின் உள்துறைச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டன் உள்துறைச் செயலாளருடனான சந்திப்பைத் தொடர்ந்து, இந்திய தூதுக்குழுவில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தூதுக்குழு தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.