January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தி.மு.க தலைவர் ஸ்டாலினை நேரில் சென்று வாழ்த்தினார் கமல்ஹாசன்

சட்ட பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை,  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று சந்தித்து வாழ்த்துகளை  தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற்றதையடுத்து தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் எதிர்வரும் மே 7 ஆம் திகதி முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார் பேட்டையிலுள்ள அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கமல்ஹாசன் டுவிட்டர் தளத்தினூடாக வாழ்த்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம்,  உதயநிதி ஸ்டாலினுக்கும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். அரசியல் களத்தில் மிகக் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டாலும் ஜனநாயக பண்புடன் கமல் வாழ்த்தியது வரவேற்பை பெற்றுள்ளது.