January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”கருத்துக் கணிப்புகளை நம்பாது வெற்றிமாலை சூடத் தயாராகுங்கள்”: அதிமுக

(FilePhoto)

”கடமைகள் அழைக்கின்றன, வெற்றி மாலை சூடத் தயாராகுங்கள்” என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6 ஆம் திகதி  நடத்தப்பட்டது. இதன் வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம்  திகதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் அதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக முதல்வரும், துணை முதல்வரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதன்போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம் எனவும் வெற்றிமாலை சூடத் தயாராகுங்கள் எனவும் அதிமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

மேலும் திமுகவினர் வதந்திகளை பரப்புவதிலும், தில்லுமுல்லு செய்வதிலும், வன்முறையில் ஈடுபடுவதிலும் மிகவும் கைதேர்ந்தவர்கள் என்பதை இந்த நாடே அறியும்.

அவர்கள் வெட்கித் தலைகுனியும் வகையில், மக்கள் நம் இயக்கத்தை இமயத்தின் உச்சியில் வீற்றிருக்க வைத்தனர். அந்த நிலையே இப்போதும் தொடரப் போகிறது என்று அவர்கள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் ”களங்கள் அனைத்திலும் கழகம் வெல்லும். கடமைகள் அழைக்கின்றன் கண்மணிகளே, வெற்றிமாலை சூட தயாராகுங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்கள்.

திமுக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருக்கிற சூழ்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தமது ஆதரவாளர்களுக்கு அறிக்கை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.