photo-Akshay Kumar_twitter
கொரோனா நிவாரணப்பணிகளை செய்துவரும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீரின் அறக்கட்டளைக்கு பொலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஒரு கோடி நிதியுதவி அளித்திருக்கிறார்.
கொரோனா நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா,ஜ,க எம்.பி.யுமான கவுதம் கம்பீர் அறக்கட்டளை தொடங்கியுள்ளார்.
இதற்கு நடிகர் அக்ஷய் குமார் 1 கோடி ரூபாய் நன்கொடையாக அளித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வரும் இந்த நேரத்தில் சினிமா பிரபலங்களும் முக்கிய நபர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இருளில் ஒவ்வொரு உதவியும் நம்பிக்கையின் கதிராக இருக்கிறது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் கம்பீர் .
இதற்கு பதிலளித்த அக்ஷய் குமார்,மிகவும் கடினமான இந்த சந்தர்ப்பத்தில்,உதவ முடிந்ததில் மகிழ்ச்சி எனவும் இந்த நெருக்கடியிலிருந்து அனைவரும் விரைவில் வெளியேற வேண்டுகிறேன் என ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொலிவுட் நடிகர் அக்ஷய் குமார் சிகிச்சை பெற்று குணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.