January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியா முழுவதும் 551 ஒக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்குமாறு பிரதமர் மோடி உத்தரவு

photo:/dir.indiamart.com

இந்தியாவில் மருத்துவமனைகளில் ஒக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கு தீர்வு காணும் வகையில் நாடு முழுவதும் 551 ஒக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவ தேவைக்கான ஒக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்காக பி.எம்.கேர் ஊடாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் மிக விரைவில் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதேவேளை, மருத்துவமனைகளுக்கு தங்கு தடையற்ற ஒக்ஸிஜன் விநியோகத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.