(Photo : freepressjournal.in)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளதால் மீண்டும் தமிழக அரசு கூடிய கட்டுப்பாடுகளை அறிவித்து இருக்கிறது.
எதிர்வரும் 26 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் அமுலுக்கு வருகின்ற புதிய கட்டுப்பாடுகளுக்கமைய தனியார் மற்றும் அரச பொது போக்குவரத்தில் இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய கடைகள், ஷொப்பிங் மோல்களுக்கு அனுமதி இல்லை. அத்தோடு, திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கை விடுதிகள், பார்கள் செயல்பட அனுமதி இல்லை.
ஹோட்டல்கள், டீ கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி,அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை.
அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள அதேவேளை, மாநகராட்சி, நகராட்சிகளில் அழகு நிலையங்கள், சலூன்கள் செயல்பட அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படவுள்ளது.புதுச்சேரி தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பதிவு கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது எனவும் இறுதி ஊர்வலம், சடங்குகளில் 25 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை எனவும் அறிவித்துள்ளது.
அதேவேளை, மளிகை, காய்கறி கடைகள் மற்றும் இதர அனைத்து கடைகளும் வழக்கம்போல் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.