
(Photo: SafwanKhanz/Twitter)
டெல்லியில் ஒக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பலரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கை தொடர்ந்தால் கடுமையான சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என டெல்லி மருத்துவமனைகள் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்த விடயம் காரணமாக மருத்துவமனைகளில் பொலிஸ் பாதுகாப்பும் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனைகள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதுடன், நோயாளிகள் பலர் உயிரிழந்துள்ளதாக நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை ‘ஒக்ஸிஜன் விநியோகத்தை தடுக்கும் அதிகாரிகள், மத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளாட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் யாரையும் விட்டுவைக்கமாட்டோம் என டெல்லி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும் ஒக்ஸிஜன் விநியோகத்தை தடுப்பவர்கள் குறித்து ஒரு சம்பவத்தை டெல்லி அரசு எங்களிடம் உதாரணமாகக் காட்டினால் போதும். அந்த அதிகாரிகளை தூக்கில் போடுவோம் எனவும் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
கூடுதல் பாதுகாப்பு கோரும் மருத்துவமனைகளுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க டெல்லி பொலிஸாருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.