April 29, 2025 21:46:53

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மகாராஷ்டிரா கொரோனா மருத்துவமனையில் தீ: 12 நோயாளர்கள் பலி

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

வசாய் விரார் என்ற பகுதியில் உள்ள விஜய் வல்லா மருத்துவமனையில் இன்று அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது காயமடைந்த பலர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்தால், அங்கு சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சமீபத்தில் நாசிக் நகரில் ஆக்சிஜன் கசிவு காரணமாக, 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.