February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ்நாட்டில் 12 ஆயிரத்தைக் கடந்தது தினசரி கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் ஒரே நாளில் புதிதாக 12,652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள அதேவேளை,கடந்த 24 மணி நேரத்தில் 59 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் தற்போது 89,428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் அதிகபட்சமாக 3,789 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன்,24 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, 400 கோடி மதிப்பில், ஒரு கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகளை வாங்க கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ள அதேவேளை,18 – 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசிகளை பயன்படுத்த உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது.

மேலும், ஒக்ஸிஜன் உற்பத்தி செய்ய முன்வரும் தொழிற்சாலைகளுக்கு உடனடியாக தற்காலிக உரிமம் வழங்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது .

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் டெல்லி – துபாய் இடையே எதிர்வரும் ஞாயிறு முதல் 10 நாட்களுக்கு விமான சேவையை நிறுத்துவதாக எமிரேட்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.