January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் இந்திய விஜயம் இரண்டாவது தடவையாகவும் இரத்து!

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் இந்திய விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைக் கருத்திற்கொண்டே, அவரது இந்திய விஜயம் பிற்போடப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் இந்திய விஜயம் பிற்போடப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

வருட ஆரம்பத்தில் இந்திய குடியரசு தினத்தில் கலந்துகொள்ள இருந்த போரிஸ் ஜோன்சன், பிரிட்டனில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதால் அதனைக் கைவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, அவரது இந்திய விஜயம் ஏப்ரல் மாதத்தில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், வருட இறுதி வரை அவரது விஜயம் பிற்போடப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரெக்சிட்டைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே பொருளாதார மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை வலுப்படுத்திக்கொள்வதே, போரிஸ் ஜோன்சனின் இந்திய விஜயத்தின் நோக்கமாகும்.