June 16, 2025 20:34:01

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா தொற்று உறுதி

தி.மு.க கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிவுற்ற நிலையில் நாளுக்கு நாள் அரசியல் பிரபலங்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கும், கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தி.மு.க பொருளாளரும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர் பாலுவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை டி.ஆர்.பாலுவின் மகனான டி.ஆர்.பி.ராஜா தனது டுவிட்டர் தளத்தில், தனது தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவரை கடந்த ஒரு வாரமாக சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறும்  கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் வீடு திரும்பியுள்ளார்.