இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2 ஆவது அலை தாக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துகிறார்.
அதற்கமைய கொரோனா வைரஸ் அதிகம் பரவி வரும் 12 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.
டெல்லி, சண்டிகர் ,மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, தடுப்பூசி போடுவது தொடர்பாகவும் பிரதமர் மோடி முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வைரஸ் தாக்கம் வேகமாக பரவி வருவதால் பல மாநிலங்களில் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதேவேளை தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.