May 1, 2025 17:38:07

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இவர்களுக்குச் சொந்தமான 25க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இதன்போது ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமான 5 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், அண்ணாநகர் திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்திக், ஜீ ஸ்கொயர் பாலா வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் திகதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுகவின் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனைகளை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.