January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஜெயலலிதா மாநில உரிமைகளை மத்திய அரசுக்கு விட்டுக்கொடுக்காமல் துணிச்சலாக செயற்பட்டவர்’

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு வகையில் துணிச்சல்மிக்கவர் தான் என தி.மு.க முன்னாள் எம்.பி.ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா  பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அங்கு தொடர்ந்து பேசிய ஆ.ராசா; முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மாநில உரிமைகளை மத்திய அரசுக்கு விட்டுக்கொடுக்காமல் துணிச்சலாக செயற்பட்டவர்.

அத்துடன் பிரதமராக இருந்த நரேந்திர மோடி கூட,ஜெயலலிதாவை சென்னையில் உள்ள போயஸ் தோட்டத்துக்கு சென்றுதான் சந்தித்திருந்தார்.

ஒரு வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா துணிச்சல்காரர்.அவர் ஆட்சியில் இருந்தவரை தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுக்கவில்லை.

ஜெயலலிதா இருந்தவரை தமிழ்நாட்டில் நீட் தேர்வு வரவில்லை.ஜி.எஸ்.டி., உதய் மின் திட்டம் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கவில்லை.

ஆனால், ஜெயலலிதாவின் ஆட்சியை நடத்துகிறோம் என்று கூறும் எடப்பாடி பழனிச்சாமி,மாநில உரிமைகளை விட்டுக் கொடுத்து மத்திய அரசின் காலடியில் கிடக்கும் அவல நிலை உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.