July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி; பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்

இந்தியாவில் கொரோனா நோய்க்கு எதிரான தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் சனிக்கிழமை (16) தொடங்க உள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக காலை 10.30 மணியளவில் தொடங்கி வைக்கிறார்.

அனைத்து மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் 3006 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது.

முதல் கட்டமாக நாடு முழுவதும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட இருக்கிறது

இதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மையத்திலும் தினமும் 100 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.முதல் நாளில் மட்டும் சுமார் 3 லட்சம் பேருக்கு தடுப்பு ஊசி பாேடப்படவுள்ளது.

முதற்கட்டமாக 3 கோடி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

அதன்பின்னர் 50 வயதுக்கு மேற்பட்ட 27 கோடி பேருக்கு கொராேனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோன்று தமிழகத்திலும் 16 ஆம் திகதி மதுரையில் ராஜாஜி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்.

தமிழகம் முழுவதும் 166 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 கோவிஷீல்டு கொராேனா தடுப்பு மருந்துகள் தமிழகத்திற்கு வந்துள்ளன.

அத்துடன் பாரத் பயோடெக் நிறுவனத்தின் 20 ஆயிரம் கோவாக்சின் தடுப்பு மருந்துகளும் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளன .