November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவு கஞ்சா தனுஸ்கோடி கடலோர காவல் படையினரால் மீட்பு!

இந்திய தனுஸ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 31 இலட்சம் மதிப்பிலான கஞ்சா மூடைகள் இந்திய கடலோர காவல் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சமீப காலமாக தனுஸ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடல் அட்டை, கடல் பல்லி, கஞ்சா, சமையல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் அதிகமாக கடத்தப்பட்டு வருகிறன.

இந்த நிலையில் தனுஸ்கோடி கடற்கரை வழியாக இலங்கைக்கு சட்ட விரோதமாக கஞ்சா கடத்த இருப்பதாக மண்டபம் கடலோர காவல் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இதனையடுத்து அந்த பகுதியில் 2 மூடைகளில் இருந்த சுமார் 150 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், அவை மண்டபத்தில் உள்ள கடற்படை முகாமிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

மேலும் ராமேஸ்வரம் உளவுத்துறை அதிகாரிகள்கு கிடைத்த தகவலையடுத்தது தனுஸ்கோடி பகுதியில் மேலும் 2 மூட்டைகளில் சுமார் 60 கிலோ கஞ்சாவை மீட்டு தனுஸ்கோடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 210 கிலோ மொத்த கஞ்சாவின் இலங்கை மதிப்பு சுமார் 31 இலட்சம் ரூபாய் இருக்கும் என கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.