January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தீபமேற்றி தீபாவளி வாழ்த்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி

தீபாவளி பண்டிகையை கொண்டாடும் மக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தனது பாரியார் ஜில் பைடனுடன் இணைந்து வெள்ளை மாளிகையில் தீபமேற்றி அவர் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

இது தொடர்பில் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், ‘‘இருளில் இருந்து, அங்கு அறிவு, ஞானம் மற்றும் உண்மை உள்ளது என்பதையும், பிரிவிலிருந்து ஒற்றுமை. விரக்தியிலிருந்து நம்பிக்கை என்பதையும் தீபாவளி ஒளி நமக்கு நினைவூட்டட்டும்” என்று ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ”அமெரிக்காவில் வசித்து வரும் இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயின்கள், புத்த மதத்தினர் மற்றும் உலகெங்கும் உள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்’’ எனவும் அவர் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.