November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அமுல்

தமிழகத்தின் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்தும் அதிகமாக உள்ளன.

இம்மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையிலும், அதே சமயம், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்திலும் ஊரடங்கில் சிறிய தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் மேற்படி 11 மாவட்டங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு ஜூன் 7 முதல் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்ககப்படுகிறது.

இதனடிப்படையில், அனைத்து அரச அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்களுடன் இயங்கவுள்ளன.

பதிவுத்துறை அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 டோக்கன்களை மட்டும் வழங்கி, பத்திரப் பதிவுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகளும் தனியாக செயற்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்களிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கவும் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இறைச்சிக் கடைகள் மற்றும் மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயற்பட திங்கட்கிழமை முதல் அனுமதிக்கப்படும்.

மீன்சந்தைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும் என்று பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் கொரோனா தடுப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி செயற்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.