January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது கொடுக்காவிட்டால் போராடுவேன்; பிரபல தயாரிப்பாளர்

சுதா கொங்கராவின் இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சூரரைப் போற்று’.

படம் வெளியான பின் இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் கொண்டாடிவரும் நிலையில், இந்த லிஸ்டில் இனணந்துள்ளார் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ்.

“சூரரைப் போற்று எல்லாத் துறைகளிலும் உயரப் பறந்துள்ளது.
ஒரு கோபக்கார இளைஞனாக, ஆர்வமிகு இளம் தொழிலதிபராக, அன்பான கணவனாக அனைத்துக் காட்சிகளிலும் சூர்யா சிறப்பாக நடித்துள்ளார்.அபர்ணா பாலமுரளி தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தான் வரும் ஒவ்வொரும் ஃப்ரேமிலும் தனது முத்திரையைப் பதிக்கிறார்.

ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை படம் முழுவதும் அற்புதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.நிகேத் உடைய கேமரா ஃப்ரேம்கள் ஓவியம் போல இருக்கின்றன. கலை இயக்குநர் ஜாக்கி மற்றும் எடிட்டர் சதீஷ் சூர்யா நிச்சயமாக இன்னும் பல உயரங்களைத் தொடுவார்கள்

ஊர்வசி மேடம் அற்புதமாக நடித்துள்ளார். அவர் தான் தோன்றும் காட்சிகளைத் சிரமமின்றி சுமந்து நம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறார்.

இது சூரரைப் போற்று அல்ல சூர்யா போற்று.அவர் மாறனாகவே வாழ்ந்துள்ளார். இந்த வருடம் உங்களுக்காக தேசிய விருது காத்திருக்கிறது.இல்லையென்றால் நான் அதற்காகப் போராடுவேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்..