January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வைரலாகும் தளபதி விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படம்

தமிழ் சினிமா கொண்டாடும் சூப்பர் ஹீரோ, தளபதி விஜய் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ட்ரண்டாகி வருகிறார்.

அந்த வகையில் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பிற்காக ஜோர்ஜியா சென்றிருந்தபோது அங்கு எடுக்கப்பட்ட நடிகர் விஜய்யின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்து 29 வருடங்களை கடந்துள்ள தளபதி விஜய்யின் சினிமா பிரவேசம் தற்போது அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்படும் ஒரு கதாநாயகனாக தமிழ் சினிமாவில் 29 வருடங்களை கடந்து தாக்குப்பிடிப்பது என்றால் சாதாரண விடயமல்ல .

அதற்கான முழு உழைப்பும் நடிகர் விஜய்யையே சாரும். அர்ப்பணிப்பு, தியாகம், சினிமா மீது கொண்ட காதல், இன்றுவரை இளமையாக தன்னை பலப்படுத்தி வைத்திருப்பது என பல்வேறு தடைகளையும் தாண்டி, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கொண்டாடும் ஒரு சிறந்த கதாநாயகனாக விஜய் வலம் வருகிறார் என்றால் அது மிகையல்ல.

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை திறந்தாலே விஜயிசம் 29 என்ற ஹேஸ்டேக்குடன்
விஜய்யின் ஆரம்ப கால முதல், தற்போது வரையான அனைத்து வகையான புகைப்படங்களையும் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

தற்போது விஜய்யின் இந்த 29 வருட சினிமா பிரவேசத்தை கொண்டாடும் வகையில், ஜோர்ஜியாவில் எடுக்கப்பட்ட கறுப்பு டி-சர்ட்டில் விஜய் ஆற்றில் நின்று கொண்டு இயற்கையை ரசிக்கும் புகைப்படம் ட்விட்டரில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

1992 ஆம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில், நடிகராக அறிமுகமானார் தளபதி விஜய்.

நடிப்பு, நடனம், காமெடி, பாடகர் என அனைத்து துறைகளிலும் சூப்பர் ஹீரோவாக தமிழ் சினிமாவில் இளைஞர்களுக்கு ரோல்மொடலாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் தளபதி விஜயின் 29 வருட சினிமா பிரவேசத்தை வாழ்த்தி மோஷன் போஸ்டர், ஸ்பெஷல் டிபி போன்றவற்றை பகிர்ந்து வாழ்த்தி வருகிறார்கள்.

தற்போது பீஸ்ட் படப்பிடிப்பின் போது விஜய் ஆற்றில் நின்றுகொண்டு இயற்கையை ரசிக்கும் புகைப்படத்தை அவரின் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

This slideshow requires JavaScript.