January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மருதாணி செவப்பு செவப்பு, மகாராணி சிரிப்பு சிரிப்பு; பட்டையை கிளப்பும் ரஜினிகாந்தின் அண்ணாத்த பாடல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்திலிருந்து மூன்றாவது பாடலாக மருதாணி பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

குடும்ப கொண்டாட்டமாக ,திருமண வைபவம் என துள்ளல் கிளப்பும் பாடலாக இது அமைந்துள்ளது.

பல வருடங்களின் பின்னர் மீண்டும் பழைய நட்சத்திர ஜோடிகளை திரையில் காண்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் என்று நம்பலாம்.

குஷ்பூ ,ரஜினி ,மீனா ஜோடி காம்போ என இந்த மருதாணி பாடலில் நடனமாடி கலக்கி உள்ளார்கள்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த பாடலில் நடிகர் ரஜினிகாந்த் ,மீனா, குஷ்பு ஆகியோரது துள்ளல் நடனம் மீண்டும் அந்தக் காலத்தையும் நினைவுபடுத்துகிறது.

அண்ணாமலை,படையப்பா,முத்து ஆகிய படங்களில் பார்த்த ரஜினியை ‘அண்ணாத்த’ படத்தில் நாம் காணலாம் என்பது நிச்சயம்.

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார் நடிகை மீனா.இனி வரும் படங்களிலும் கதாநாயகியாக நடிக்க கூடிய தகுதி எனக்கு இருக்கிறது என்ற தோரணையில் இந்தப் பாடலில் அழகாக காட்சியளிக்கிறார்.

கீர்த்தி சுரேஷின் திருமண வைபவத்தில் குடும்பம் சகிதமாக கொண்டாடப்படும் இந்த பாடலானது இனி எல்லோரது திருமண வீடுகளிலும் ஒலிக்கும் என்பது உண்மையே.

பாடலைக் கேட்கும்போதே கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்தும் வகையில் உள்ள இந்த மருதாணி பாடல் நிச்சயம் ஹிட் வரிசையில் இடம்பிடிக்கும்.

மானா மதுரையில
மாமன் குதிரையில
மால கொண்டு வாரான்

மீனா மினுங்கையில
மின்னி சினுங்கையில மேளம் கொட்ட போறான்…

மருதாணி செவப்பு செவப்பு, மகாராணி சிரிப்பு சிரிப்பு…

என அண்ணாத்த திரைப்பட பாடல் குடும்பப் பாங்கான திருமண வைபவ கொண்டாட்டத்துடன் களைகட்டியுள்ளது.

இந்த பாடல் திருமண விழாவிற்கான ஏற்பாடுகள் போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.பெண் வீட்டார் பெண்ணின் பெருமைகளை பாடுவது போல் பாடல் எழுதப்பட்டுள்ளது.

வரும் தீபாவளி திருநாள் அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ திரைப்படம்.

இந்நிலையில், இந்தப் படத்தின் மூன்றாவது பாடலான ‘மருதாணி’ தற்போது லிரிக்கல் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பாடலில் ரஜினியை தவிர்த்து மீனா, குஷ்பூ, பரோட்டா சூரி, சதீஷ் ,பாண்டிய ராஜன், வேல ராமமூர்த்தி என நடிகர் பட்டாளமே வருகிறார்கள்.

இந்த பாடலை பாடகர்கள் நாகேஷ் அஸிஸ், அந்தோணி தாசன், வந்தனா சீனிவாசன் பாடியுள்ளனர்.

இந்த படம் குறித்து அண்மையில் பேட்டியளித்துள்ள
நடிகை குஷ்பு, அண்ணாத்த திரைப்படத்தில் துருதுருவென இருக்கும் இளமையான ரஜினியை பார்க்கலாம் எனக் கூறியிருந்தார்.

அண்ணாமலை ,முத்து, படையப்பா,அருணாச்சலம் இந்தப் படங்களில் வரும் ரஜினியை நாம் அண்ணாத்த படத்தில் பார்க்கலாம் என ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறார் குஷ்பூ.

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அண்ணாத்த’. நவம்பர் 4 ஆம் திகதி வெளியாகவுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அண்ணாத்த திரைப்படத்தில் தனக்கும் மீனாவுக்கும் மிகவும் அழகான கதாபாத்திரம் கிடைத்திருப்பதாக குஷ்பு கூறியிருக்கிறார்.

அண்ணாத்த படப்பிடிப்பு தனக்கு பழைய நாட்களை நினைவூட்டியது என நடிகை குஷ்பூ தெரிவித்திருக்கிறார்.

நீண்ட காலத்துக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் உடன் பணிபுரிந்ததாகவும் ,படப்பிடிப்பு தளத்தில் அவருடன் பேசுவதற்கு சற்று தயங்கியதாகவும் குஷ்பூ கூறியுள்ளார் .

ஆனால், நடிகர் ரஜினிகாந்த் தங்கள் அருகே வந்து அமர்ந்து ஏன் என்னைத் தனியாக விட்டுவிட்டு அமர்ந்திருக்கிறீர்கள்? என்று கேட்டுச் சிரித்தார் என குஷ்பு தனது பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

28 ஆண்டுகளில் நடிகர் ரஜினியிடம் எதுவும் இன்னும் மாறவில்லை என குஷ்பு கூறியுள்ளார்.

ஒருமுறை படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிகாந்த் ஐந்து நிமிடங்கள் தாமதமாக வந்ததால் படக்குழுவினரிடம் அவர் மன்னிப்பு கோரியதாக கூறியுள்ள குஷ்பு, யாரும் தனக்காக காத்திருக்கக் கூடாது என்று நினைப்பவர் அவர் எனவும்
அந்தப் பணிவு தான் தற்போதும் ரஜினிகாந்தை தனித்து விளங்க செய்வதாகவும் குஷ்பூ தெரிவித்திருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்னும் கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடன் இருப்பதை பார்க்க முடிந்ததாக நடிகை குஷ்பு குறிப்பிட்டுள்ளார் .