November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பழம்பெரும் நடிகரான ஸ்ரீகாந்த் காலமானார்!

இந்திய தமிழ் சினிமாவின் பழம்பெரும் தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த் தனது 82 ஆவது வயதில்  உடல் நலக்குறைவால்  காலமானார்.

1965 ஆம் ஆண்டில் ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளியான “வெண்ணிற ஆடை” திரைப்படம் இவருக்கும் சினிமா துறையில் அறிமுகத்தை வழங்கியிருந்தது. இதில் அவரது நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது.

அதனை தொடரந்து இவர் நடித்த தங்கப்பதக்கம், பைரவி உள்ளிட்ட படங்களும் அவருக்கு புகழை தேடித் தந்தது.

200 படங்களுக்கு மேல் நடித்துள்ள ஸ்ரீகாந்த், 50 படங்களில் கதாநாயகனாக ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். அத்தோடு இவர் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

இவர் சிவாஜி, கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு முதலாவது ஹீரோவாக நடித்தவர் இவர் என்பது மற்றொரு சுவாரஸ்யமான விடயம்.

அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும் பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

“பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் அவர்கள் கதாநாயகனாக மட்டுமன்றி அனைத்து வகையான பாத்திரங்களிலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தும் கலைஞராக  திகழ்ந்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.

ஸ்ரீகாந்த் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “என்னுடைய அருமை நண்பர் திரு ஸ்ரீகாந்த் அவர்கள் மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.