”சினிமாவில் எனக்கு ஆசை கனவெல்லாம் கிடையாது, தெரியாமல் இப்படி வளர்ந்துவிட்டேன்” என நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.
திரைப்படத் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு நிர்மாணத்திற்காக நடிகர் விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.
இந்த நிகழ்ச்சி சென்னை வடபழனி பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதன்போது, தான் சினிமாவில் நடித்தது ஏன் என்பது குறித்து விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் என் அப்பாவின் கடன் இருந்தது. துபாயில் போய் சம்பாதித்தேன். 20ஆம் திகதி ஆனதும் வீட்டு வாடகையை நினைத்து பயமாக இருக்கும். வாடகை வீட்டில் இருப்பது பாகிஸ்தானில் இருப்பதுபோலவே இருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் சினிமாவில் தெரியாமல் இப்படி வளர்ந்துவிட்டேன், சினிமாவில் ஆசை கனவெல்லாம் கிடையாது என்று கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் பாக்யராஜ், ஆர்.பி. உதயகுமார், தயாரிப்பாளர் தாணு, பெப்சி சம்மேளனத் தலைவர் ஆர்.கே. செல்வமணி, மேலும் பெப்சி சங்கத்தின் நிர்வாகிகள், எழுத்தாளர் சங்கம், ஒளிப்பதிவாளர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் திரைப்படத் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு அமைக்க நிதி உதவியாக ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை பெப்சி சங்கம் சம்மேளனத் தலைவர் ஆர்.கே. செல்வமணி உள்ளிட்ட அனைத்துச் சங்கம் நிர்வாகிகளிடம் வழங்கினார் விஜய் சேதுபதி.