January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மலையாள புத்தாண்டு கொண்டாட நயன்தாரா, விக்னேஷ் சிவன் கொச்சின் பயணம்

மலையாள புத்தாண்டு எதிர்வரும் 14 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில்,சொந்த ஊரான கேரள மாநிலம் கொச்சின் புறப்பட்டுச் சென்றிருக்கிறார் நயன்தாரா.

அவருடன் காதலரான விக்னேஷ் சிவன் இருவரும் தனி விமானத்தில் பயணித்து உள்ளனர்.

இந்நிலையில் நயன்தாரா தனது தாய் மொழியான மலையாளத்தில் நடித்துள்ள நிழல் படம் வெளியாகியுள்ளது .

இப்படத்திற்கு கேரளாவில் நல்ல வரவேற்பு இருக்கும் சூழ்நிலையில் அவர் தற்போது அங்கு சென்றிருக்கிறார்.

நயன்தாராவுக்கு ஜோடியாக குஞ்சாக்கோ போபன் நடித்துள்ள இத்திரைப்படம் வெளியானது முதல் நல்ல விமர்சனங்களையும் பாராட்டுக்களையும் குவித்து வருகிறது.

இந்நிலையில், நயன்தாரா தனி விமானத்தில் கொச்சின் சென்றுள்ளார்.

கேரளாவில் வரும் ஏப்ரல் 14 ஆம் திகதி மலையாள புத்தாண்டான விஷு பண்டிகைக் கொண்டாடப்படுகிறது.

இருவரும் தனி விமானத்தில் கேரள மாநிலம் சென்றுள்ள வீடியோவை அவரது காதலரான விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார் .

மலையாள புத்தாண்டை கொண்டாடி முடித்த பின்னர் , விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல ரெண்டு காதல், அண்ணாத்த படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் விக்னேஷ் சிவன் ,நயன்தாரா ஜோடி கடந்த வருடம், தனி விமானத்தில் கேரளா சென்று ஓணம் பண்டிகையை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.