May 17, 2025 12:14:38

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ்க் கட்சிகளின் ஒன்றுகூடல் யாழில் ஆரம்பமானது

தமிழ்க் கட்சிகளின் ஒன்றுகூடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்றது.

யாழ். நகரிலுள்ள உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் , தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா, தமிழ் மக்கள் கூட்டணியின் பொருளாளர் வி.பி.சிவநாதன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

தேர்தல் முறை மறுசீரமைப்பு, புதிய அரசிலமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலேயே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.

இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளவில்லை.