பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சமிந்த விஜேசிறி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று விசேட அறிவிப்பை விடுத்த அவர், தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளதாக தெரிவித்தார்.
கடந்த பொதுத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் இருந்து இவர் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.