January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரமோஸ் குரூஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்தது இந்தியா

பிரமோஸ் குரூஸ் என்ற ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘ஐஎன்எஸ் சென்னை’ எனும் நவீன நாசகாரி கப்பலில் இருந்து இந்த ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய- ரஸ்ய கூட்டு தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள
இந்த ஏவுகணை தரையிலும் வான்வெளியிலும் கடலிலும் சுமார் 290 கிலோமீற்றர் செல்லக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

400 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கக்கூடிய பிரமோஸ் சுப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளை இந்தியா பரிசோதனை செய்ததன் தொடர்ச்சியாகவே இன்றைய ஏவுகணை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சீனாவுடன் எல்லையில் முறுகல் நிலை ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து இந்தியா தொடர்ச்சியாக ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.