கிழக்கு லடாக்கில் உள்ள எல்லை பகுதியில் அமைதி நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சீனாவுடனான இந்தியாவின் உறவும் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்
இணையவழி ஊடான உரையாடல் நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
எல்லை விவகாரம் மிகவும் குழப்பமானது, சிக்கலானது என்பதை நாங்கள் அறிவோம்.எல்லை பகுதியில் அமைதி, சமாதானம் நிலவவேண்டியது அவசியம்.
அமைதி சமாதானத்திற்கு கடும் பாதிப்புகள் ஏற்பட்டால் உறவுகள் பாதிக்கப்படும். நாங்கள் இன்று அதனையே எதிர்கொள்கின்றோம் .
இன்று பெருமளவு படையினர் பெருமளவு ஆயுதங்களுடன் எல்லையில் நிலை கொண்டுள்ளனர்.இதுவே நாங்கள் எதிர்கொள்ளும் மிகக்கடுமையான பாதுகாப்பு சவால்.
ராஜீவ்காந்தி பிரதமரானது முதல் எல்லை தொடர்பாக தான் கடைப்பிடித்து வந்த நிலைப்பாடு அணுகுமுறைகைளை சீனா பெருமளவிற்கு மாற்றிக்கொண்டுள்ளது எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.