இஸ்ரேலின் வடகிழக்கே உள்ள மெரோனில் புகழ்பெற்ற யாத்திரை தலமொன்றில் சன நெரிசலில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்தப் பகுதியில் புகழ்பெற்ற கல்லறை தலத்தில் ஏராளமான இஸ்ரேல் மக்கள் ஒன்றுகூடிய போதே அங்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் பல்லாயிரக் கணக்கானோர் அந்த இடத்தில் கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது நெரிசலில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ளதுடன், பெருமளவானோர் காயமடைந்துள்ளனர்.
அந்தப் பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு ஜெருசலேமில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர்.
தற்போது அந்தப் பகுதியில் பொலிஸாரும் மீட்புக் குழுவினரும் தொடர்ந்தும் தேடுதலில் ஈடுபட்டு வருவதுடன், அங்குள்ளவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஒருவருடக் காலமாக மூடப்பட்டிருந்த குறித்த யாத்திரைத் தலம் மீண்டும் திறக்கப்பட்ட நிலையிலேயே அங்கு பெருமளவானோர் கூடியுள்ளனர்.