ரஷ்யா மற்றும் வடகொரியாவைச் சேர்ந்த அரசு ஆதரவுடைய ஹக்கர்கள், உலகின் முன்னணி மருந்து நிறுவனங்களின் தரவுகளை திருட முயன்றதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களில் நடைபெற்ற இந்த ஹக்கிங் முயற்சியில் பெரும்பாலானவை தோல்வி அடைந்துள்ளது.
ஆனால் எத்தனை முயற்சிகள் வெற்றி பெற்றது அல்லது அத்துமீறல்களின் தீவிரத்தன்மை என்ன என்பது போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.
பெரும்பாலான அத்துமீறல்கள் கொரோனாத் தொற்றுத் தடுப்பூசி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும், இந்தியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களில் நடந்துள்ளதாக, மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.