இந்தியாவின் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அரசியல் தெளிவற்றவராக திகழ்வதாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
ஒபாமா எழுதியுள்ள ‘A Promised Land ’ என்ற புத்தகம் குறித்து அமெரிக்காவின் பிரபல நாளிதழான நியூயோர்க் டைம்ஸ் விமர்சனம் செய்துள்ளது.
அதில் ராகுல் காந்தி ஒரு பதற்றமான அறியப்படாத குணம் கொண்டவர் என்றும் ஆசிரியரைக் கவர பாடத்தை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் மாணவரைப் போல் ராகுல் காந்தி ஒரு விடயத்தை முழுமையாக அறிந்து கொள்வதில் ஆர்வம் இல்லாதவராக திகழ்கிறார் என்று ஒபாமா எழுதியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த நூலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி குறித்தும் ஒபாமா பதிவிட்டுள்ளார்.
மன்மோகன் சிங் ஒருவிதமான உணர்ச்சியற்ற நேர்மைத்தன்மையை கொண்டவர் என ஒபாமா தெரிவித்துள்ளார்.சோனியா காந்தியின் அழகு குறித்தும் ஒபாமா இந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.