November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தடுப்பு மருந்தினை கொள்வனவு செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முடிவு

பயோன்டெக் பிபைஜர் நிறுவனங்கள் தயாரித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை கொள்வனவு செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

இந்த வருட இறுதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான விநியோகம் ஆரம்பமாகவுள்ளது என பயோன்டெக் பிபைஜர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் குறிப்பிட்ட மருந்தினை விநியோகிக்கும் நடவடிக்கைகள் எவ்வாறு இடம்பெறும் என்பதை ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிக்கவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சுகாதார ஆணையாளர் கொரோனா வைரஸ் மருந்து மிகவும் முக்கியமானது என வர்ணித்துள்ளார்.
மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் ஏற்பட்டுள்ள இணக்கப்பாடு காரணமாக பரந்துபட்ட திறமையான பயனளிக்கக்கூடிய தடுப்பு மருந்தினை வைத்திருக்கும் எங்கள் நோக்கத்தினை நோக்கி நகர்ந்துள்ளோம் என குறிப்பிட்டுள்ள அவர், கொரோனா வைரஸ் மருந்து பாதுகாப்பானது என்பது உறுதியான பின்னரே அதனை விநியோகிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் உறுப்பு நாடுகளுக்கு தடுப்பு மருந்து எப்போது கிடைக்கும் என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் சுகாதார ஆணையாளர் கருத்து வெளியிட மறுத்துள்ளார்.

பல நடவடிக்கைகளை எடுக்கவேண்டியுள்ளது. அதன் பின்னரே உறுப்பு நாடுகளுக்கு எப்போது மருந்தினை விநியோகிக்கலாம் என்பதை தெரிவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.