மியன்மாரின் பொதுத்தேர்தலில் ஆங்சான் சூகியின் கட்சி வெற்றிபெறும் நிலையில் உள்ள அதேவேளை, இந்த வெற்றியை நிராகரித்துள்ள எதிர்க்கட்சி, மீள வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
ஆளும் ஆங்சான் சூகியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின் படி பெரும் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.அறிவிக்கப்பட்ட 158 முடிவுகளில் 130 இடங்களை வெற்றி பெற்றுள்ள தேசிய லீக் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றும் நிலையிலுள்ளது.
இதேவேளை, இராணுவத்தின் ஆதரவுடனான யுஎஸ்டிபி கட்சி 15 ஆசனங்களையே கைப்பற்றியுள்ளது.இதேவேளை, இந்த முடிவுகள் வெளியானதை தொடர்ந்து தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள யுஎஸ்டிபி கட்சி, மறு வாக்கெடுப்பை நடத்தவேண்டுமெனவும் இராணுவத்தை தலையிடுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சுதந்திரமான, நியாயமான, பக்கச்சார்பற்ற தேர்தலை உறுதி செய்வதற்காக மீள் வாக்களிப்பு இடம்பெறவேண்டும் என அந்த கட்சி தெரிவித்துள்ள அதேவேளை,மியன்மார் தலைநகரில் இன்று ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.