பஹ்ரைன் பிரதமர் ஷெய்க் கலீபா பின் சல்மான் அல் கலீபா இன்று உயிரிழந்துள்ளதை அந்நாட்டு தேசிய ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.
84 வயதுடைய அவர் அமெரிக்காவின் மாயோ கிளினிக் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவில் இருந்து அவரது உடல் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் இறுதிக் கிரியைகள் நடைபெறும் என பஹ்ரைன் அரச மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அத்தோடு, பிரதமரின் மரணத்தை முன்னிட்டு பஹ்ரைனில் ஒரு வார கால துக்க நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கலீபா பின் சல்மான் 1971 ஆம் ஆண்டிலிருந்து பஹ்ரைனின் பிரதமராக செயற்பட்டு வந்துள்ளதோடு, உலகின் நீண்ட காலம் பிரதமர் பதவியில் இருந்தவர்களுள் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.